திருப்பூரில் உள்ள தொழிற்சங்கங்கள்
தொழிற்சங்கம் என்பது தொழிலாளர்களினுடைய அமைப்பு. அவை தொழிலாளர்களினுடைய பொது நோக்கமான சிறந்த வேலை நிலைமைகள் வேலை நேரம் போன்றவற்றை எல்லா தொழிலாளர்களும் பெறுவது. மற்றொரு வகை சுகாதார காப்பீடு மற்றும் ஓய்வு திட்டம். இந்திய தொழிற்சங்க சட்டம் - 1926 தொழிற்சங்கங்களை ஒழுங்குபடுத்துகிறது. சட்டப்படி தொழிற்சங்கங்கள் முதலாளி – தொழிலாளர் உறவினை மேம்படுத்துகின்றனர்.
இந்தியாவில் தொழிற்சங்க வரலாறு:
ஆங்கிலேயர்கள் ஆண்டபோது ஜவுளி ஆலைகளை மெட்ராஸ் பம்பாய் சுரத் மற்றும் கல்கத்தாவில் நிறுவினர். 19-ம் நூற்றாண்டில் ஜவுளி ஆலைகள் உயர்ந்திருந்தன. பெருமளவில் வேலைவாய்ப்பைப் பெற்றனர். இவை சட்டத்தில் மேம்பாட்டினை ஒழுங்குபடுத்த தேவையாக இருந்தது. முதல் உலகப்போர் தொடங்கியதால். இந்த ஆலைகளில் உள்ள தொழிலாளர்கள் மிக அதிகமான வேலை செய்தனர். வேலை நிலைமைகள் மேலும் மோசமடைந்தன. இந்த நிலையில்தான் சங்கங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டது.
தொழிற்சங்கங்களை ஆளும் சட்டங்கள்:
இந்தியாவில் தொழிற்சங்கங்கள் தேசிய மற்றும் மாநில அளவிலாளான சட்டத்தால் ஆளப்படுகிறது. இந்த சட்டங்களில் சங்கம் அமைக்க சங்கம் சேருவதற்கு கூட்டுப்பேரம் பேசுவது போன்றவற்றை அளிக்கிறது. இந்திய அரசியலமைப்பானது சங்கமாவது அமைப்பு ரீதியாக இணைவதை அடிப்படை உரிமையாக்கியுள்ளது. இந்தியாவில் தொழிற்சங்கங்கள் சம்பந்தப்பட்ட சட்டமான தொழிற்சங்க சட்டம் 1926 சங்கம் நிறுவுவது மற்றும் பதிவு பற்றி விளக்கமளிக்கிறது.
தொழிற்தகராறு சட்டம் 1947 – வழிகாட்டுதலின்படி தொழிற்சங்கங்கள் செயல்படுகிறது. இவை முக்கியமாக தொழிற்தகராறின் போது தொழிலாளர் மற்றும் முதலாளியின் உரிமையின்படி விசாரணை நடத்தி தீர்வு காண்பதை ஒழுங்கு செய்கிறது.
தொழிற்சங்கம் என்ன செய்வார்கள்?
தொழிற்சங்கம் நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும். பேச்சுவார்த்தையானது சம்பள உயர்வு சிறந்த வேலை அல்லது நிலைமைகள் மருத்துவகாப்பீடுகள் போன்ற பிரச்சினைகளில் நிகழ்த்தப்படும். முதல் நோக்கமாக தொழிலாளர்களின் ஆர்வங்களையும் நலன்களையும் பூர்த்தி செய்யக்கூடியவையாக தொழிற்சங்கம் இருக்கும் .
சங்கத்தின் முக்கிய செயல்கள்• உறுப்பினர்களுக்காக பேசுவது
• உறுப்பினர்களின் வேலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வழிகாட்டுவது
• உறுப்பினர்களின் தேவைக்காக முதலாளி மற்றும் நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவது
தொழிற்சங்கங்கள் பொருளாதார பரிசீலனைக்காக கூட்டுப்பேரம் பேசுவது. இருப்பினும் கூடுதல் வேலை நேரம் குறித்தும் முக்கிய பங்காற்றுகின்றனர். அத்துடன் வேலை வாய்ப்புகள் மற்றும் நிபந்தனைகள் தொழிலாளர் நல செயல்பாடுகள் மேம்பாட்டிற்கும் பங்களிக்கின்றனர். தொழிற்சங்கங்கள் தொழில் உறவுகள் மற்றும் உற்பத்தி மேம்பாட்டிற்கும் உதவுகிறது.